விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வங்கியில் எளிதில் கடன் பெறலாம்.
யாரெல்லாம் இந்த கிசான் கார்டை வாங்க முடியும்?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, விவசாயிகள், குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைத்தாரர்கள், விவசாய சுய உதவிக்குழுக்கள் ஆகியவர்கள் இந்த கிசான் கிரெடிட் கார்டை பெறமுடியும்.
கிசான் கிரெடிட் கார்டில் அப்படி என்ன பயன்?
☛கிசான் கிரெடிட் கார்டு மூலம் ₹3 லட்சம் வரை கடன் வாங்கும் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
☛பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான பயிர்களுக்கு பயிர் காப்பீடு வசதியும் வழங்கப்படுகிறது.
☛விதைகள், உரம்,விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு கடன் பெற்றுக்கொள்ளலாம்.
☛அதிகபட்ச கடன் வரம்பு ₹3 லட்சம்
கிசான் கிரெடிட் கார்டை பெற அருகில் உள்ள வங்கிக்கிளைக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்களின் கிரெடிட் ஸ்கோர், நிலம், பயிர், வருமானம் ஆகியவற்றை சரிபார்த்தப்பின் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.