உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் கொரோனா வைரஸ் நோயினால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு இதுவரை குறைந்தபாடில்லை. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழலில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மற்றொரு புறம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையினையும் மருத்துவர்கள் வழங்கிவருகின்றனர். இந்த நிலையில் தான் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விபரங்கள்
அமெரிக்கா – 23,80,146
பிரேசில் – 18,84,051
இந்தியா -11,45,630
ரஷியா – 6,50,173
தென் ஆப்ரிக்கா – 3,47,227
சிலி – 3,32,411
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.