எகிப்தில் தங்க நாக்குகளுடன் புதைக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸாண்ட்ரியா :
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ‘தபோசிரிஸ் மேக்னா’ என்ற கோவிலில் எகிப்திய – டொமினிகன் குழு ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அன்றைய கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் பிரபலமாக இருந்த பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட 16 மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர்.
Read more – சிறுத்தையுடன் சிறைவாசம் அடைந்த தெருநாய் : 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு
அந்த மம்மிகளை சுற்றி மூடப்பட்டிருந்த பிளாஸ்டர், கைத்தறி மற்றும் பசை அடுக்குகளால் ஆன மூடியில் பதியப்பட்ட அலங்காரத்தில் கடவுளின் உருவம் மற்றும் நாகம் போன்ற உருவங்கள் பதிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஒசைரிஸ் கடவுளின் நீதிமன்றத்தில் பேசுவதற்காக நாக்குகளின் வடிவிலான தங்கப் படலம் ஒன்றும் அதனுடன் இருந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த தொல்பொருள் ஆய்வாளரான கேத்லீன் மார்டினெஸ் கூறியதாவது : ஒசைரிஸ் பாதாள உலகத்தின் அதிபதி என்றும் அவரே இறந்தவர்களுக்கு நீதிபதி என்றும் பண்டைய எகிப்தியர்கள் நம்பியதால் இறந்த ராஜா மற்றும் ராணிகளின் உடலை சுற்றி பாதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.