பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சோனரோவுக்கு 3வது முறையாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் அங்கு 1,367 பேர் புதிதாக பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 81,828 ஆக உயர்ந்தது. பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 14,65,970 பேர் குணமடைந்தனர். 6,30,361 பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் போல்சோனரோவுக்கு கொரோனா தொற்று பதினான்கு நாட்களுக்குப் பிறகும் பாஸிட்வாக வந்துள்ளது. கடந்த 14 நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் மீண்டும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மலேரிய தடுப்பு மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு போல்சானரோ எடுத்து வந்த நிலையில், அம்மருந்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வல்லுநர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.