ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல்முறையாக பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரே வகுப்பறையில் ஆண்களும் பெண்களும், நடுவில் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டு தனித்தனியாக அமர வைக்கப் பட்டுள்ள புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் படிப்பதற்கு உரிமை வழங்கப்படுமா என சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் இந்த புகைப்படம் உலகளவில் கவனம் பெற்று வருகிறது.