தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு சென்றுவிடுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இரண்டாம் முறையாக டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜோபிடன் என்பவர் போட்டியிடுகிறார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் சமீபத்தில் நிலவியது.
சூறாவளி பிரச்சராம் மேற்கொண்டு வந்த டிரம்ப் க்கு உதவியாக அவரது மனைவி மெலனியாவும் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்களிருவரின் உதவியாளர் ஹோம் ஹிக்சுக்கு (31) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவரும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அமெரிக்க அதிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாட்டுகளின் தலைவர்கள் பலரும் அதிபர் டிரம்ப் விரையில் உடல் நலம் பெறம் வேண்டுமென்று வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து டிரம்ப் நீயிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரச்சாரத்தில்,வரும் அதிபர் தேர்தலில் நான் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வரலாற்றில் மிகவு மோசமான நபருடன் நான் போட்டியிடுகிறேன். அவரிடம் நான் தோற்றால் எனது வாழ்க்கை வீண் என கருதி நான் நாட்டை விட்டு செல்வதுதான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.




