தூக்கக்கலக்கத்தில் இளைஞர் ஒருவர் காதுகளில் மாட்டிருந்த ஏர்பட்ஸ் ஹெட்போன் ஒன்றை முழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்கா :
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் பிராட் கவுதியர் (38) . வழக்கம்போல் காலையில் இவர் தூங்கி எந்திரித்தவுடன் தண்ணீர் குடித்துள்ளார். அப்பொழுது அவருக்கு தண்ணீர் குடிக்க சிரமம் ஏற்பட்டு நெஞ்சு வலியும் தொடர்ந்து வந்துள்ளது.
இதையடுத்து பிராட் கவுதியர் தனது உறவினர்களுக்கு உடனே தெரிவிக்க, அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் திடீரென இப்படி ஆனதற்கு காரணம் என்று பிராட்டிடம் கேள்வி எழுப்பியபோது, தூங்கி எந்திரிக்கும் போது தன்னுடைய ஹெட்போன் ஏர்பட்ஸ்களில் ஒன்றை காணவில்லை என்பதால் தான் விழுங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Read more – பழனி பஞ்சாமிர்தத்தை தபால் மூலம் அனுப்ப தமிழக அரசு புதிய திட்டம்…
இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் எக்ஸ்ரே செய்து பார்க்கையில் உணவுக்குழாயில் ஏர்பட் ஒன்று சிக்கியிருந்ததை கண்டுபிடித்து எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் உணவுக்குழாயில் இருந்ததை அகற்றியுள்ளனர். தற்போது பிராட் உடல் நிலை குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.