கொரோனா தடுப்பூசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16 ம் தேதி போடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 1 ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்க மத்திய அரசு முன்வந்தது.
அதேபோல், வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான மருந்துகளை மாநில அரசுகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கவும் வேளையில், மாநிலங்களுக்கு 400 ரூபாயும், தனியாருக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.
Read more – திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : தலைமை தேர்தல் அதிகாரி
இதன் காரணமாக சர்ச்சை கிளம்பிய நிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க கேரளா, சத்தீஸ்கர், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது.