மாத ஊதியம் போதாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, பிரிட்டன் பிரதமர் முடிவு செத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்சிட் ஒப்பந்தத்தை அமல்படுத்த போதிய ஆதரவு இல்லாததால், பிரிட்டன் பிரதமர் பதவியை வகித்து வந்த தெரேசா மே கடந்தாண்டு மே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து பதவியேற்ற போரில் ஜான்சன், நாடாளுமன்றத்தை களைத்து உடனடியாக தேர்தல் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வரலாற்றில் இடம்பெற்றார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு தற்போது சம்பளமாக ஆண்டிற்கு 1,50,402 யூரோக்கள் கிடைப்பதாகவும், ஆனால், அவர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய போது ஒரு மாதத்திற்கு, 23,000 யூரோ சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனிப்பட்ட முறையில் மாதம் 1,60,000 யூரோவையும் சம்பாதித்துள்ளார். இதனால், பிரதமர் பதவி மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதவில்லை என போரிஸ் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, போரிஸ் ஜான்சனுக்கு ஆறு குழந்தைகள் உள்ளதால் அவர்களது வாழ்வியல் செலவு மற்றும் அவரது முன்னாள் மனைவி மெரினா வீலருக்கு விவாகரத்து ஒப்பந்தத்தின்படி கொடுக்க வேண்டிய ஜீவனாம்சா தொகை என அவர் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
இதனால், பிரெக்ஸிட் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு, பிரதமர் பதவியிலிருந்து வெளியேற போரிஸ் முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகமான தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது. ஒரு பிரதமருக்கே சம்பளம் பத்தலைனா, எங்களை எல்லாம் எந்த லிஸ்ட்டில் வைப்பது என அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஊதியம் போதாததால் பிரதமர் பதவியை போரிஸ் ராஜினாமா செய்கிறார் என்ற தகவல், இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.