சீன நகரான வூஹானில் பள்ளிகள் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு தொடங்கிய இந்த கொரோனாவைரஸ், இன்று 213 நாடுகளுக்கு பரவி அதிகமான மனித பேரழிவையும், பொருளாதார சீரழிவையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2.48 கோடி ஆகும். 8.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.72 கோடி பேர் இந்த கொடிய வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனவைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட வூஹான் நகரில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது பூஜ்ஜியமான காரணத்தினால் அங்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்நகரின் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.