உலகிலேயே மிகச்சிறிய எலக்ட்ரிக் காரை சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த மிக பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் WULING HONG GUANG. இந்த நிறுவனம் தான் சமீபத்தில், டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில், நானோ மினி இவி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் இந்தியாவின் டாடாவின் நானோ காரை விட மிக சிறியதாக தோற்றமளிக்கிறது. இந்த காரானது இரண்டே இரண்டு இருக்கைகளுடன், உயரம் 2,497 மில்லி மீட்டராகவும், அகலம் 1,526 மில்லி மீட்டராகவும் உள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் ‘நானோ இவி’ என பெயரிட்டுள்ளது. இந்த கார் குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தை விட சற்றே பெரியதாக இந்த கார் தோற்றமளிக்கிறது.
இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே சிறிய எலக்ட்ரிக் கார் என்ற பெயரை மட்டுமல்லாமல், உலகிலேயே மிக விலை மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயரையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




