பிரிட்டனில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாள்தோறும் ஆயிரத்துக்குள் இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அது 3,000 ஐ எட்டியது.

இது தொடர்பாக BBC வானொலியில் பேசிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் இளைஞர்கள் மிகவும் அலட்சியம் காட்டுவதாக வருத்தம் தெரிவித்தார். அவர்களது இந்த செயல், வீட்டிலுள்ள வயதானவர்களை தான் பாதிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அறிகுறி இல்லாமலே கொரானா தொற்றுக்கு ஆளாகி, அதனை முதியவர்களிடம் பரப்ப நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் இதுவரை கொரோனா தொற்று கடந்த 28 நாட்களுக்குள் மட்டும் 41,554 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கைதான் என்றாலும், தொற்று எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது. ஆனாலும் அதனால் எந்தவித மனநிறைவும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.




