பொலிவியா நாட்டில் கொரோனாவிற்கு நீராவி மற்றும் மூலிகையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்தில் குவிந்து வருகின்றனர்.
எல் ஆல்டோ :
பொலிவியா நாட்டில் எல் ஆல்டோ பகுதியில் கொரோனாவிற்கு நீராவி மற்றும் மூலிகையின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அங்குள்ள பொதுமக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொலிவியாவில் இன்னும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையையே மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
Read more – அதிமுக கொடியை காரில் இருந்து சசிகலா நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக காவல்துறை எச்சரிக்கை
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான பொலிவியா நாட்டில் ல் அல்டோ நகரில் உள்ள நீராவி சிகிச்சை மையத்தில் ஏராளமான மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.