சீனாவில் 138 மணி நேரத்திற்குள் கட்டப்பட்ட 4 ஆயிரம் அறைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
ஹெபி :
வடக்கு சீனாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் வேளையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில் அங்குள்ள ஷிஜியாஷூவாங் பகுதியில் தனிமைப்படுத்துதல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் வேகவேகமாக முடிக்கப்பட்டுள்ளது.
Read more – லாட்டரி வியாபாரிக்கு அடித்த அதிர்ஷ்டம் : விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு
108 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் அமைக்கப்பட்டு இதன் முதற்கட்டமாக 606 அறைகள் சில மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆயிரத்து 173 அறைகளும், பின்னர் மொத்தமாக 4 ஆயிரத்து 156 அறைகள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டுமான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு ஏராளமான இயந்திரங்கள் உதவியுடன் இந்த முகாம்கள் கட்டமைக்கப்பட்டது என்று சீன அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது.