5,000 ஆண்டுகளுக்கு முன்பே மது வகைகளை ரசித்து உண்டு வாழ்ந்து இருக்கின்றனர் எகிப்து நாட்டு மக்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
எகிப்தின் தெற்குப்பகுதியான நார்த் அபிடாசில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரிய வந்துள்ளது. இந்த மதுபான தொழிற்சாலை நார்மல் என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
20-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே இங்கு மதுபான தொழிற்கூடம் உள்ளதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், தற்போது கண்டறியப்பட்டுள்ள மதுபான தொழிற்சாலையில் 2 வரிசைகளில் 40 மண்பாண்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பீர் தொழிற்சாலை இருந்திருப்பதாகவும், ஒரே நேரத்தில் 22,400 லிட்டர்கள் பீட் தயாரிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்லரையில் அரச சடங்குகள் நடைபெறும் போது அங்குள்ளவர்களுக்கு மதுபானம் இங்கிருந்து சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.