உக்ரைன் நாட்டில், ஓடும் ரயிலின் மேற்கூரையிலிருந்து ஆற்றில் குதித்த வாலிபருக்கு பற்கள் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் பகுதியைச் சேர்ந்த யரொ பஞ்சன்கோ என்ற வாலிபருக்கு, ஏதாவது ஒரு வித்தியாசமான செயலை செய்ய வேண்டும் எனத் திடீரென ஆசை வந்துள்ளது.
இதற்காக, தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.பின்னர், ரயிலின் மேற்கூரையில் ஏறி சிறிது தூரம் நடந்து சென்ற யரொ பஞ்சன்கோ, ரயில் ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது, அங்கிருந்து ஆற்றில் குதித்தார்.
இதில் அவர் குதித்த வேகத்தில் உடல் இழுக்கப்பட்டு, தண்ணீரில் முகம் மோதியதில் அவரின் சில பற்கள் சுக்கு நூறாக உடைந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களோடு உயிர் தப்பினார். இதைக்குறித்துக் கேள்விப்பட்டவர்கள் அனைவரும், இது உனக்குத் தேவை தானா? என்று வசைபாடி உள்ளனர்.