நியூசிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்களுக்கான பதவியேற்பு விழாவில் இந்திய வம்சாவளியான கௌரவ் சர்மா சமஸ்கிரதத்தில் பதவியேற்றார்.
நியூசிலாந்து:
நியூசிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஜெசிந்தா பிரதமரானார்.இதே தேர்தலில் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் இந்திய வம்சாவளியான டாக்டர் கௌரவ் சர்மா தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தினார்.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த புதிய எம்.பி.க்களுக்கான பதவியேற்பு விழாவில் இந்திய வம்சாவளியான கௌரவ் சர்மா சமஸ்கிரதத்தில் பதவியேற்றார்.
இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பிறந்தவர் கௌரவ் சர்மா. இவர் நியூசிலாந்தின் உள்ள ஆக்லாந்து பகுதியில் எம்.பி.பி.எஸ். பயின்று அதன் பின்னர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார்.கௌரவ் சர்மா ஹாமில்டன் நகரில் டாக்டராக பணியாற்றி அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நியூசிலாந்துக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷிதனது ட்விட்டர் பக்கத்தில் “நியூசிலாந்து பூர்வகுடிகளின் மொழியான மாவோரியில் கவுரவ் சர்மா முதலில் பதவியேற்ற பின்னர் அவர் இந்திய செம்மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றுள்ளார். இதனால் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கலாசாரத்துக்கும் பெரிதும் மதிப்பளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.