அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 22) கலிப்போர்னியாவின் மரிபோசா பகுதியில் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. 6 மணி நேரத்தில் சுமார் 16 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவி அருகிலுள்ள சியரா வனப்பகுதியில் உள்ள காட்டுமரங்கள் எரிந்து போயின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காட்டுத்தீ பரவி வெடிப்புகளை ஏற்படுத்துவதால் தீயை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.
காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் இதுவரை அழிந்திருப்பதாகவும், 6ஆயிரம் பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விரைவில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் சியரா வனப்பகுதி முழுவதும் அழியக்கூடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
-பா.ஈ.பரசுராமன்.




