பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருப்பதை கண்டு ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ம் தேதி புறப்பட்ட விமானத்தில் விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பரிமாறப்பட்ட உணவில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் சேர்ந்து பாம்பின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து சன் எக்ஸ்பிரஸ் என்ற அந்த விமான நிறுவனம் இத்தகையை செயல்பாடுகளை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உணவு வழங்கும் நிறுவனம், உணவில் பாம்பின் தலை இருப்பதை மறுத்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் சமைக்கப்படும் உணவுகள் 280 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகின்றன. எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்று யாரோ சிலர் இத்தகைய செயலை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருக்றது என தெரிவித்தது.
-பா.ஈ.பரசுராமன்.