காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பிந்தியாராணி.
காமன்வெல்த் போட்டி பளுதூக்கும் பிரிவில் 55 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற பிந்தியா ராணி 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரை விட ஒரு கிலோ கூடுதலாக தூக்கியதால் நைஜீரியாவின் அதிஜாத் அதேனிக ஒலாரினோயே தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் பிந்தியா ராணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிந்தியா ராணியின் உறுதித்தன்மையால் இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்ற நிலையில் சங்கேத் சர்கார் வெள்ளியும், குருராஜா வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
-பா.ஈ.பரசுராமன்.




