என் கணவனை திருப்திபடுத்த, சந்தோசமாக வைத்துக்கொள்ள மூன்று பெண்கள் தேவை என தாய்லாந்தை சேர்ந்த பட்டகோர்ன் என்பவரின் மனைவி கொடுத்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவில், எனது கணவனை கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு குழந்தைகள் இருக்கக்கூடாது. என் குடும்பத்தில் ஒருவர் போல் நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு சம்பளம் ₹33,800 வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். மூன்றுபேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணியை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவர் என் வீட்டுவேலைகள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கணவர் பட்டகோர்ன் கூறுகையில், “என்னை போல் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இதுபற்றி தெரிவிக்க வேண்டும்.அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வராது” என்றார். என்ன பாஸ் உங்கள் மனைவியிடம் இதுபற்றி கேட்க நீங்கள் ரெடியா?




