சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுண்டி பகுதியில் இன்று மதியம் 12:50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பலப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கம் 16 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும் கற்கள் சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்