மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்றார் டாக்டர் பிளோரான்ஸ் நளினி.
2021-ஆம் ஆண்டிற்கான மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தினை டாக்டர் நளினி தட்டிச் சென்றார்.
மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் இந்தியா மட்டுமல்லாது Glamorous Achiever என்ற பட்டத்தினையும் வென்றிருக்கிறார் டாக்டர் ப்ளோரன்ஸ் நளினி.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் மியாமி புளோரிடாவில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் அழகிப் போட்டியிலும் இந்தியா சார்பாக இவர் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த போட்டியில் வென்றதை தொடர்ந்து தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதியவற்றை முயற்சிப்போம் அப்படி ஒரு புதிய முயற்சி தான் டாக்டர் ஃப்ளோரன்ஸ் நளினி மிஸ் இந்தியா பட்டத்தினை வெல்ல ஒரு காரணியாக இருந்தது.
கற்றுக் கொள்வதற்கு எல்லையே இல்லை… தன்னுடைய வெற்றிக்கு டாக்டர் லாரன்ஸ் நளினி சொல்லும் காரணம் தாரகமந்திரம் இதுவே. என்னுடைய துறை சைகாலஜி இந்த அழகிப்போட்டி களம் எனக்கு மிகவும் புதியது எனக்காக நானே உருவாக்கி வைத்திருந்த Comfort Zone-ஐ தாண்டி பயங்களை கடந்து ஒரு மனிதியாக என்னை வளர்த்துக் கொள்வதற்கு புதிய சவால்களை சந்தித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.