நேபாள நாட்டின் பஹ்மதி மாகாணம் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் எனும் பகுதியில் உள்ள லிடி கிராமத்திலுள்ள மலைத்தொடர் உள்ளது. இங்கு 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த ஒரு மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 30 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்க பட்டுள்ளதாகவும்,இன்னும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்ற வாரம் மூணார் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இப்போது அண்டை நாடான நேபாளில் நிலசரிவு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.