பிரதமர் மோடி 12 வது பிரிக்ஸ் மாநாடு கூட்டத்தில் உலகின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையே பயங்கரவாதம் என்று உரையாற்றினார்.
பிரிக்ஸ் மாநாடு என்பது இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஆகும்.இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
பிரிக்ஸ் அமைப்பின் 12 வது மாநாடு இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நவம்பர் 17 (இன்று) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தொடங்கிய இந்தபிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ‘‘இன்று உலகின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையே பயங்கரவாதம் தான்.இந்த பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிடம் கருத்துக்கள் கேட்டு ,அதற்கான பிரச்சனை குறித்தும் நாம் அனைவரும் ஒருங்கிணைத்து சுமூகமாக தீர்வுகாண உறுதி எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.