அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஜோ பைடனுனான இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் செப்.,24ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் க்வாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அவர் இந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். கொரோனா பொதுமுடக்கம் போன்றவை நடைமுறைக்கு வந்த பிறகு பிரதமர் மோடி முதன் முதலாக அமெரிக்க பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இதுவரை வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, வெள்ளை மாளிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவையும் மோடி சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.




