அமெரிக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் என்ற கறுப்பினத்தவர் பதவி வகிக்க இருக்கிறார்.
வாஷிங்டன் :
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதையடுத்து கடந்த ஜனவரி 20 ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்று அசத்தினார். அவரை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்றார்.
ஜோ பைடன் தலைமையில் அமைந்து வரும் புதிய அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் பதவி வகிக்க இருக்கிறார்.
Read more – இன்றைய ராசிபலன் 23.01.2021!!!
இது தொடர்பாக அதிபர் ஜோ பைடனின் செய்த பரிந்துரைக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதால் இப்பதவியை வகிக்க உள்ள முதல் கருப்பின மனிதர் இவர் என்ற பெருமையை லாயிட் ஆஸ்டின் பெற இருக்கிறார். ஏற்கனவே சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, உள்நாட்டு பயங்கரவாதத்தை குறித்து விசாரணை நடத்தவும், அவற்றை ஒடுக்கவும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.