ரஷ்யாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஊழியர் அங்கு உள்ள பிணவறைக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார்.அங்கு கை கால்களை பரப்பியபடி ‘பெண் பிணம்’ ஒன்று உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயத்தில் உறைந்துபோனார்.
பின்னர் பயத்தை மறைத்துக்கொண்டு அந்த பிணத்தின் அருகே சென்று பார்த்தார் அப்போது தான் அவருக்கு தெரிந்தது , இறந்து விட்டதாக எண்ணிய மூதாட்டி (வயது 81)உயிரோடு இருக்கிறார் என்று, அருகில் சென்ற அந்த பெண் ஊழியர், பாட்டி, படுத்துக்கொள்ளுங்கள், அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
பிணவறைக்கு தூரத்தில் அமர்ந்திருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், என்னடா, இந்த பெண்ணுக்கு பைத்தியம் எதாவது பிடித்துவிட்டதா?, பிணத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாரே என்ற எண்ணத்துடன், பிணவறைக்குள் மெதுவாக நுழைந்த அவருக்கு கண்ட காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் உட்கார்ந்திருந்த மூதாட்டி, அந்த பெண் ஊழியரின் கையைப் பிடித்துக்கொண்டு எனக்கு உதவுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்ட ஓட்டுனர் திடுக்கிட்டிருக்கிறார். பின்னர் ஒரு வழியாக இருவரும் நடந்ததை யூகித்துக்கொண்டு, அந்த மூதாட்டியை துணிகளில் சுற்றி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள்.
பின்னர் விசாரித்ததில் அந்த மூதாட்டி சுய நினைவை இழந்தவுடன் இறந்ததாக கருதி பிணவறைக்கு மருத்துவமனை நிர்வாகம் எடுத்து சென்றது, ஆனால் அவர் மயக்க நிலையில் தான் இருந்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்க்கும் போது அவர் பிணவறையில் இருந்துள்ளார். இதனால் அவர் அங்கு இருந்து வெளியே வர முயற்சிக்கும் போது கீழே விழுந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.