ரஷ்யா புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த 1998 ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சேர்ந்து பூமிக்கு மேல் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியது. மேலும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் கனடா, ஜப்பான் மற்றும் போன்ற நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒப்பந்தம் முடிவடைவதால் அது செயலிழந்து 2030 முதல் 2050 வரை இடையேயான காலகட்டத்தில் செயலிழந்து பூமியில் எங்காவது ஒரு இடத்தில் விழும் என கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் அரசியல் போட்டிகள் போன்ற காரணங்களினால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் அதனால் புதிய விண்வெளி திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.