சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என அந்நாட்டு அரசு ஊடகமான எஸ்பிஏ செய்தி வெளியிட்டுள்ளது.
ரியாத் :
சவுதியில், 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,52,815 பேர் குணமடைந்தனர். 6,168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் பைசர் மற்றும் பயோஎன் டெக் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் ஒப்புதல் அளித்தது.டிசம்பர் 16 ம் தேதி சவுதி அரேபியா முதல் முறையாக பைசர் தடுப்பூசி டோஸ்களை பெற்றது, 1,00,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில், சவுதி சுகாதார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் பைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.இளவரசர் சல்மானுக்கு இடது கையில் தடுப்பூசி போடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Read more – ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம் தொடங்கி வைத்தார் : பிரதமர் மோடி
இதற்காக, சுகாதார அமைச்சர் தவ்பிக் அல் ரபியக், அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். பொது மக்களுக்கு, தடுப்பூசியை வழங்குவதில் இளவரசர் ஆர்வம் கொண்டுள்ளார். பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை நாம் இன்று பார்க்கிறோம். இது அனைத்தும், வரும் முன் காப்பதே சிறந்தது என்ற விஷன் 2030ல் கூறப்பட்டுள்ள முக்கிய கொள்கையாகும்.
சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை, குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் முன்னதாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது