இலங்கை அதிபராக சென்ற ஆண்டுஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தை முழுவதுமாக களைத்து உத்தரவிட்டார். அவருடைய பதவிக்காலத்தில் 6 மாதங்கள் மீதமிருந்த நிலையில் 8வது நாடாளுமன்றம் களைக்கப்பட்டது.
எனவே தேர்தல் அறிவிப்பு வெளியானது ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது ஆனால் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தேர்தல் நடவடிக்கையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஜூன் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்பு கடைசியாக ஆகஸ்ட 5-ம் தேதி என முடிவு செய்யப்பட்டது
இலங்கையின்பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக, தற்போதுஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைகள் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 482 பேர் களத்தில் உள்ளனர்
கடுமையான தேர்தல் விதிமுறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம், தனிமனித இடைவெளி கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது வாக்குச்சாவடிமையங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அனைத்து விதிமுறைகளையும் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது எனவே கொரோனா பற்றிய பயமின்றி அனைவரும் வாக்களிக்க வரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும்கோத்தபயராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சியும்,, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியும், மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சியும் களத்தில் இடம்பிடித்துள்ளன
நாட்டின் மொத்தவாக்காளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 ஆகும். இந்த தேர்தலுக்காக 12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்கள் ஏற்படுகின்றன71 இடங்களில்,தேர்தலுக்குப் பின்னான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றன
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக கருதப்படுகிறது.