இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கொரோன எப்போதுதான் முடிவினுக்கு வரும் என அனைவரும் எதிர்பாத்துவருகின்றனர். பலரும் கொரோன தொற்றுக்கான மருந்து பற்றி விடாமல் விவாதித்து வருகின்றனர். இப்போதான் மருந்து வரும் என்ற எதிர்பார்ப்பில் தான் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றது. இந்நிலையில் இங்கிலாந்து ணை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஜொனாதன் வான்-டாம் கொரோன தடுப்பொசி பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அது யாதெனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு விரைவில் தயாரிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கூறி இருநின்றார். இது பனி வெகு விரைவாக நடந்து வருவதாகவும் வெகு விரைவில் இந்த கொரோனக்கான தடுப்பூசி வெளியாகி மக்களின் கவலையை பூக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜொனாதன் வான்-டாம் கூறியது: அனைத்து தடுப்பூசிகளும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டாளரால் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட வேண்டும்.
இன்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் அணுகலை மேம்படுத்துவதோடு நோயாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய பாதுகாப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என கூறினார்.