இங்கிலாந்தில் நாட்டில் நடக்கும் பாதையில் மனிதனின் கால் விரல் கிடந்ததாக பெண் ஒருவர் போலீசை அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து :
இங்கிலாந்தில் உள்ள வின்லடோனின் கேட்ஸ்ஹெட் பகுதியை சேர்ந்த கேட்டி வில்சன் தனது ஃபோபி என்ற நாயை அழைத்துக்கொண்டு கடந்த ஜனவரி 5 ம் தேதி வாக்கிங் சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த நாளில் வழக்கத்தை மாற்றி மற்றொரு பாதையில் சென்ற கேட்டி, வயல் பரவு என்பதால் மிகவும் பாதுகாப்பாக சென்றுள்ளார். அப்பொழுது, அங்கு இருந்த சேற்று பகுதியில் மனிதனின் கால் கட்டை விரல் போன்று ஏதோ ஒன்று அவர் கண்ணில் பட அதிர்ச்சியடைந்து அந்த இடத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பலருக்கு பகிர்ந்து உடன் அனைவரும் அதை கால் கட்டை விரல் என்றே உறுதி அளிக்க, பயத்தில் 101 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதி விரைவாக வந்த காவல் துறையினர் மற்றும் மோப்ப நாய்கள் அந்த புகைப்படத்தை பார்த்து அவர்களும் கட்டை விரல் என்று முடிவெடுத்து விட்டனர்.
Read more – இந்திய விமானத்தில் புதிய சாதனை : முற்றிலும் பெண்களால் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஒரு சிறிய உருளைக்கிழங்கு என்றும் ‘மனித கால்விரல்’ இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மேலதிகாரி ஒருவர் கேட்டியை தனியாக அழைத்து இது உங்களுக்கு கால்விரலா?” என்று கையில் அந்த உருளைக்கிழங்கை திணிக்க கேட்டி தர்ம சங்கடம் பட்டு அனைவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அது உருளைக்கிழங்கு என்று உறுதியானத்திற்கு பிறகு தான் கேட்டி நிம்மதி அடைந்தார் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.