தான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடத்திற்கு சென்ற தம்பதியினரை சிங்கம் கடித்துக் குதறியது.அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்துக் கொடுத்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவரே சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63.அவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவிற்கு சஃபாரி சென்றனர்.
இதுக் குறித்து பிரிட்ஜ் கூறுகையில்,அந்த சிங்கம் எங்களை கடித்துக் கொன்று விடும்,இனி உயிர் வாழ வாய்ப்பில்லை என்று பயந்தோம்.அந்த தருணத்தை கனவிலும் மறக்க முடியாது.
இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் அதை முற்றிலும் மறுத்து விட்டது.ஆனால் அவர்கள் சுற்றுலா சென்ற இடத்தில் எந்த கண்காணிப்பு கேமிராவும் இல்லை,வழிக்காட்டியும் இல்லை.
பேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிய வந்தது.
ஃபோர்ஜெட் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளது. இந்த ஜோடி அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.