தைவான் நாட்டில் வசித்து வரும் அந்த நாட்டு நபர் ஒருவர் அவசர மருத்துவ உதவி வேண்டும் என சொல்லி ஆம்புலன்ஸை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் இருக்கும் இடத்தில் இருந்து அவரை மீட்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறக்கி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆனால் அந்த நபர் சிகிச்சை பெறாமல் அப்படியே அங்கிருந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் ‘வாங்க்’ என தெரிந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் இருந்து தனது இல்லம் வெறும் 200 மீட்டர் தூரம் தான் என்பதால் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக வேண்டுமென்றே பயன்படுத்தி உள்ளார் என்பதனை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் அடுத்த முறை இப்படி செய்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் போலீசார். தைவான் நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.