தியேட்டர்கள் திறக்கப்படும் என்றவுடன் சினிமா ரசிகர்கள் குஷியாகி இருப்பிர்கள் ஆனால் இங்கு இல்லை கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில்தான்.
அங்கு உள்ள “வுகான்” மாநிலத்தில் தான் இன்று உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்க பட்டது.வைரஸ் பரவதொடங்கியதும் அந்த நாட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு பகுதிகள் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் உள்ள மொத்த இருக்கையில் 30 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தியேட்டருக்கு வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே அனுமதிக்கபடுவர்.மேலும் பார்வையாளர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.