இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால் விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் பல்வேறு கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.
இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நகரங்களான லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.
Read more – டெல்லியில் போராடும் விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை நிறுத்திவிட்டனர். கனடா, தென் அமெரிக்கா, அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் நேரடி விமான போக்குவரத்து சேவையை முதற்கட்டமாக நிறுத்தியுள்ளது.