2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவு அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்படுகின்றன. அதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து அறிவிக்கபட்டது.
https://twitter.com/NobelPrize/status/1314490999482265601?s=19
அதைதொடர்ந்து, இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசிக்கு எதிரான அந்த அமைப்பின் போராட்டத்திற்கும், போர் போன்ற மோசமான சூழல் நிலவும் பகுதிகளில், அமைதியை ஏற்படுத்த அந்த அமைப்பின் பங்களிப்பையம் பாராட்டி இந்த கவுரம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.