தமிழகம் முழுவதும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். மேற்குதொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதிக கன மழைக்கான ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழையும், நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு,தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்,திருவாரூர்,தஞ்சை, நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




