தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில்: இன்று நீலகிரி, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
– பா.ஈ.பரசுராமன்.