நேற்று சனிக்கிழமை,எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒரு பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்தபோதிலும், அவர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை இருப்பினும், உலகக் கோப்பை வென்ற கேப்டன், பல ஆச்சரியங்களை நமக்கு தருவதில் பெயர் பெற்றவர், இப்போது அமைதியாக விளையாட்டிலிருந்து விலகி நடக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில் இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை ஓய்வு பெற தூண்டிய காரணங்களை அடுக்கினார்
எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் பின்னணியில் உள்ள காரணிகளை விளக்கிய கவாஸ்கர், டி 20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பது அவர் ஏற்கனவே எடுத்திருந்த முடிவை முழுமையாக பாதித்திருக்கக்கூடும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார் .
“ஐபிஎல் 2020 மார்ச் மாதத்தில் நடைபெற்றிருந்தால் அவர் அவரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பார்க்க காத்து இருந்திருக்கலாம் என்றார் தற்போதும் கூட, டி -20 உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுமா என்று அவர் காத்து இருந்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ”என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
“ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அவர் அறிந்து கொண்டவுடன், இனி காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் உணர்ந்தபோது, அந்த அடிப்படையில்தான் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக நான் நினைக்கிறேன்.
“டி -20 உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்திருந்தால், ஐ.பி.எல். இல் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தன்னை தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அவர் கற்பனை செய்திருப்பார்,
பின்னர் இந்தியாவுக்கு மிகச் சிறப்பாக செயல்படுவதன் மூலம் அதிகபட்சமாக டி 20 உலகக் கோப்பை வென்று விடலாம் என்பதே அவரின் திட்டமாக அமைந்திருக்கும்.
இந்த T2o உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த மாதம், தொற்றுநோய் காரணமாக ஐ.சி.சி அதை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைத்தது. தற்போது டி -20 உலகக் கோப்பை 2021 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்றும், டி 20 உலகக் கோப்பை 2022 ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் ஐ.சி.சி அறிவித்தது..
இதுவே தோனியின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று கவாஸ்கர் தெரிவித்தார் .