இந்தியாவில் ஹோண்டா டியோ BS6 மாடல் ஸ்கூட்டரின் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கபட்டு உள்ளது.

இந்தியாவில் அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று டியோ. குறைவான எடை, வாடிக்கையாளர்களுக்கு கைவசம் அடங்கும் அமைப்பு ஆகியவை பொதுமக்களை வெகுவாக கவரந்துள்ளது. இந்நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் டியோ BS6 டியோ ஸ்கூட்டர் மாடல் விலையை உயர்த்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டியோ பிஎஸ்6 ஸ்கூட்டார்களில் இரு வேரியண்ட்களின் விலையில் மே மாதத்தில் ரூ. 552 உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது உயர்த்தப்பட்ட விலை ரூ. 955 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா டியோ எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே 61,497 ரூபாய்
மற்றும் 64,847 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஹோண்டா டியோ BS6 மாடல்கள் அதன் BS4 மாடல்களை விட ரூ. 5476 மற்றும் ரூ. 7099 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. BS6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய 110cc டியோ BS6 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது.




