நிதிச்சுமையில் சிக்கி தவித்துவரும் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரையில் கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவுசெய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், ‘மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதிச்சுழலில் சிக்கி தவித்துவருகிறது. இதன்காரணமாக தனது ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி ஊழியர்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பணியாளர்களை ஆறு மாதம் முதல் 5ஆண்டுகள் வரை ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்ப இயக்குனர்கள் குழு மற்றும் தலைவர் ராஜிவ் பன்சாலுக்கு அங்கீகாரம் அளித்து உள்ளனர் ’ என்று விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.