மோடியால் ஏற்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி டுவிட்டரில் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார் இது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ம் வருடம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது முன்னேற்றத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று அக்கட்சியினர் நாள் தவறாமல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சில ஆண்டுகளாக நம் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இறங்குமுகத்தில் தான் உள்ளது. இதில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக அதலபாதாளத்துக்குப் பொருளாதாரம் மூழ்கியது.

ரூ.500, ரூ.1000ம் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, எந்த திட்டமும் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட ஜி.டி.பி ,,புதிய இந்தியா உருவாக்கப் போகிறோம் என்று சொல்லப்பட்ட கதைகள் இதுபோன்ற பல அடிப்படைக் காரணமே இல்லாத திட்டங்கள் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியது என்று எதிர்க்கட்சிகள் ஒருசேர பாரதிய ஜனதா அரசின் குற்றங்களை அடுக்கி வருகின்றனர் .
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிப்பு” என்று நீண்ட பட்டியலை பதிவிட்டுள்ளார்.

அதில், “
1) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.டி.பி இல் ஏற்பட்ட சரிவு
2) 45 ஆண்டுகளில் இதுவரை ஏற்படாத அளவுக்கு அதிகமான வேலைவாய்ப்பின்மை
3) 12 கோடி மக்களின்வேலை இழப்பு
4) மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டிதொகையின் பங்குகளை மத்திய அரசு தராமல் இருப்பது
5)கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மற்றும் பரவல் மற்றும் ஏற்படும் மரணங்களில் உச்சம் தொட்ட இந்தியா.
6) எல்லையில் அத்துமீறும் வெளிநாட்டு படையினர்.
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார் இதைக்கண்ட பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது கொந்தளித்து வருகின்றனர் ஏனென்றால் அவர்கள் இப்போதும் கூட கொரோனா தொற்று நோயால்தான் ஜிடிபி குறைந்துள்ளது என்று தெரிவித்து வருகின்றார்கள்.




