சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மற்றும் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூரில் உள்ள தனது தந்தையை பார்க்க ராஜேஷ்குமார் வந்துள்ளார்.
அங்கு சென்ற அவர் கால்கள் வலிப்பதாக கூறி மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கின்றார். பின்னர் திடிரென்று தன் அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட அவர் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்தபோது அவர் அங்கு தூக்கில்தொங்கியபடி கிடைத்துள்ளார். இதனைகண்ட அவரின் தந்தை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளானர்.
அங்கு நடத்தபட்ட உடற்கூறு ஆய்வில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் இறப்பதர்க்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் தனது நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த செல்வதுரை மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பல நபர்களிடம் தனது பெயரை சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்று இருவருமே வைத்துக் கொண்டனர். ஆனால் வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் தன்னை தகராறு செய்து வருவதாகவும் அதில் மேலும் செல்வதுரை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளையும் சில வழக்கறிஞர்களையும் அழைத்து வந்து என்னை மிரட்டி சில பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இதை நான் கேட்டப்போது நாங்கள் உன்னையும் உன் குடும்பத்தியும் கொள்ளாமல் விடமாட்டோம் என மிரட்டியதாக எழுதியுள்ளார்.
எனது இறப்பு செல்வதுரை, ஞானப்பிரகாசம் ஆகிய இருவர் மட்டுமே காரணம் என அந்த கடிதத்தில் ராஜேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து திருவொற்றியூர் போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ராஜேஷ்குமார் கடிதத்ததில் குறிப்பிட்ட இருவரும் கைது செய்யப்படுவர் என தெரிகிறது.