நடிகை பேபி ஷாமிலி தனது மழலைப் பருவத்திலேயே தேசிய விருது வென்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை ஷாலினியின் தங்கை நடிகை ஷாமிலி 1990-ம் வருடம் மணிரத்னம் டைரக்சனில் வெளிவந்த அஞ்சலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். அப்போது அவருக்கு வயது நான்கு தான் இருக்கும். அந்த மழலைப் பருவத்திலேயே தன் சிறப்பான நடிப்பிற்காக சுமார் நான்கு விருதுகளை குவித்து இருந்தார் ஷாமிலி.
இதில் அஞ்சலி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசு திரைப்பட விருது மற்றும் சிறந்த குழந்தை நடிகைக்கான தேசிய விருது, கேரள மாநில அரசின் திரைப்பட விருது, மத்தே ஹடிது கோகிலே என்ற படத்திற்காக கர்நாடகா மாநில அரசின்விருது என மொத்தம்நான்கு விருதுகளை பெற்றிருந்தார்.
இதில் அவரிடம் இத்தனை சிறிய வயதிலேயே இத்தனை விருதுகள் வென்ற அனுபவம் குறித்து தற்போது ஷாமிலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அளித்த பதில் “அந்த காலகட்டங்களில் எனக்கு அதிகம் எதுவும்தெரியாது. நான் ஜெயலலிதா அம்மாவின் கரங்களால்தமிழ்நாடு மாநில அரசின்விருதைப் பெற்றுக் கொண்டேன். இப்போது கூட அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த ஆளுமை, மேலும் அவர் படித்த பள்ளியில் தான் நானும் பயின்றேன் . இதுபோன்ற சில விஷயங்கள் நம்மை சிறப்பாக உணரவைக்கும். ஆனாலும்கூட அந்த நேரத்தில், நான் அஞ்சலிக்கான தேசிய விருதை வாங்க போகும்போது, அங்கே என்ன நடக்கிறது என்பது கூட எனக்கு தெரியவில்லை.. மேலே சென்று விருது வாங்க கூட எனக்கு பயிற்சி கொடுத்திருந்தனர். அப்போது அந்த விருதின் மதிப்புபற்றி கூட எனக்கு புரிந்து இருக்காது.
ஆனால் தற்போது, இந்த அறிவு கூட இல்லாமல் அந்த மழலை வயதிலேயே என்னால் இவ்வளவு செய்து இருக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்..