உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் :
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமாக ஒன்றாக கருதப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரத்தில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்து கொண்டனர்.
ஆட்டம் தொடங்கியது முதலே ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடியதால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் வேகமாக பந்தை தரையில் அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.. இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு நிலைமையை விளக்கினார்.
இருந்தாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு,ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா வெற்றி பெற்றதாக அறிவித்தனர் இதனால் காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார்.