இந்திய கிரிக்கெட் வாரியம்(பி. சி. சி. ஐ ), ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காலரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் மத்திய உள் அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது.
அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது என்றும், சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவில் கூறப்பட்டு இருக்கின்றது. அதன் காரணமாக பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் ’ என அவர் தெரிவித்துள்ளார்.




