மருத்துவ படிப்புக்கான, ‘Neet’ நுழைவு தேர்வு, இன்று நாடு முழுவதும் நடக்கிறது. தேர்வுக்கு தமிழகத்தில், 1.17 லட்சம் பேரும் நாடு முழுவதும் , 16 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, Neet நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட neet தேர்வு பல போராட்டங்களுக்கு பிறகு இன்று தொடங்குகிறது.
இதற்காக, நாடு முழுதும், 3,843 மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. தேர்வு எழுத, 15.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 14 லட்சம் பேர் தேர்வில்பங்கேற்கலாம் என,எதிர்பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




