நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஓர் விடைக்கு ஊரடங்கின் போது எதனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை என்ற அலட்சிய பதிலுக்கு ராகுல் காந்தி மத்திய அரசை சாடினார்.

திங்களன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கரோனா ஊரடங்கின் போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை கணக்கிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர். எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்று தெரியவில்லை என்றால் யாருமே இறந்துபோகவில்லை என்று கூறுகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரோனா பரவலினால் கடந்த மார்ச் 25 முதல் மொத்தம் 68 நாட்களுக்காக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடு திரும்ப பல்வேறு வழிகளை கையாண்டனர்.
இதில் பலரும் கஷ்டப்பட்டு வீடு திரும்பினார் இதில் சிலர் வழியிலே இறக்க நேரிட்டது இது அனைவருமே அறிந்த உண்மை. அனால் இப்போது மத்திய அரசோ எத்தனை பேர் வேலை இழந்தார்கள், எத்தனை பேர் இங்கிருந்து புலம்பெயந்து சென்றார்கள் என்று கூட தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். அப்போது யாருமே இந்த ஊரடங்கின் போது உயிர் நீக்கவில்லை என்று கூற வருகிறீர்களா என்று தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




